Main Menu

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) -எவ்வித உண்மையும் இல்லை – மத்திய அரசு

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) திட்டவட்டமாக நேற்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, கொரோனா காலத்தில்போன்று பொது முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையிலேயே மேற்படி தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

‘ உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது.

எனவே, எரிசக்திஇ விநியோகச் சங்கிலிகள், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான களநிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதில் இந்தியா தனது திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி உள்ளது. மேலும், நாங்கள் சரியான நேரத்தில், திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இதை நான் தெளிவாகக் கூறுகிறேன்.’ – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.