Main Menu

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 3385 பேர் உயிரிழந்துள்ளதுடன், 98ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.

முதலில் கேரளாவை சேர்ந்த 3 பேரை வைரஸ் தாக்கியுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 29பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து குறித்த வைரஸ் காரணமாக இதுவரை முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.