இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது!
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து ஏழு பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதலில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் அதனைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மொத்த பாதிப்பு ஒரு கொடியே ஒன்பது இலட்சத்து 63 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 111 ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஆறு இலட்சத்து 67 ஆயிரத்து 741ஆகப் பதிவாகியுள்ள நிலையில் தற்போது ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 542 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...