Main Menu

ஆஸ்திரேலியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி!

ஆஸ்திரேலியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் சுறா தாக்கியதில் ஆடவர் ஒருவர் பலி.

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான கல் தீவில் சம்பவம் நடந்தது.

முக்குளிப்பாளர் என நம்பப்படும் அந்த ஆடவர், Great White Shark வகையைச் சேர்ந்த சுறாவால் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுறா தாக்குதல்கள் அதிகம் நடக்கும் உலக நாடுகளில் ஆஸ்திரேலியா ஒன்று.

கடந்த ஆண்டு அங்கு சுமார் 27 சுறா தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.  

பகிரவும்...