ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்குத் திரும்பிய இணையச் சேவைகள்

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கியிருந்த இணையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் அங்கு இணையச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அவ்வப்போது முடக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
அந்தவகையில் கடந்த 2 நாட்களாக முடக்கப்பட்டிருந்த இணைய சேவை தற்போது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய முடக்கம் குறித்து சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நாவின் வலியுறுத்தலுக்கு அமைய இவ்வாறு இணைய சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத் தடை காரணமாக கல்வி, வணிக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.