Main Menu

அவசரகால பிரகடனம் : உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் – சாரா ஹல்டன்

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சவால்களைத் தீர்ப்பதற்கு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை அவசியம் என சாரா ஹல்டன் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அனைத்து அடிப்படை உரிமைகளுடன் அமைதியான போராட்டத்திற்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டங்கள் ஜனநாயக கருத்து சுதந்திரம் மற்றும் தீர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்றும் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...