Main Menu

அரசுடமையாகும் பிரெஞ்சு மின்சார வாரியம்! – €8 பில்லியன் யூரோக்களில் ஒப்பந்தம்

பிரெஞ்சு மின்சார வாரியத்தை (Électricité de France) முற்று முழுதாக அரசுடமையாக்குவதற்குரிய முயற்சிகள் முழு மூச்சில் இடம்பெற்று வருகிறது.

இதற்கான அரசு €8 பில்லியன் யூரோக்கள் செலுத்தவேண்டும் என செய்திகள் வெளியாகியுள்ளன. பிரெஞ்சு மின்சார வாரியத்தில் 84 வீதமான பங்கை அரசு வைத்துள்ளது. தனியார் வசமுள்ள மீதி 16 வீதமான பங்கை – முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது. மீதமுள்ள பங்கினை வாங்க அரசு €8 பில்லியன் யூரோக்கள் பணம் செலுத்தவேண்டும் எனவும், மேற்படி தொகைக்கு அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

மேற்படி ஒப்பந்தம் தொடர்பாக பொருளாதார அமைச்சகம் தகவல் வெளியிட மறுத்துள்ளது.

இவ்வருடத்தின் இறுதியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என அறிய முடிகிறது.  

பகிரவும்...