Main Menu

அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலி – பெருவில் ஊரடங்கு

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இதனால் பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யவேண்டும், அதிபர் டினா பொலுவார்டே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெட்ரோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, பெருவின் தென் கிழக்கில் ஜூலியாகா நகரில் உள்ள விமான நிலையம் அருகே அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலியானதைத் தொடர்ந்து பெருவில் ஊரடங்கை அந்நாட்டின் அதிபர் டினா பொலுவார்டே அமல்படுத்தினார். அதன்படி அடுத்த 3 தினங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.

பகிரவும்...