Main Menu

அரசியல் சாசனத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி பரிந்துரை!

அரசியல் சாசனத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிந்துரை செய்துள்ளார்.

ரஷ்ய அரசியல் சாசனத்தில் அதிரடி திருத்தங்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்தார்.

1993-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாகப் பரிந்துரை செய்யப்பட்ட குறித்த திருத்தங்களை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், மேலும் புதிய திருத்தங்களை மேற்கொள்வதற்கான 24 பக்க பரிந்துரையை அவர் தாக்கல் செய்துள்ளார்.

பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்ததன் பின்னர் குறித்த பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பரிந்துரைகளில் கடவுள் நம்பிக்கை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், திருமணம் என்பது ஆண் – பெண்ணின் கூட்டமைப்பு என வரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிரவும்...