Main Menu

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் உயிரிழப்பு

அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தனது படைகள் அவரைக் கொன்றதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

71 வயதுடைய அல்-கொய்தா தலைவர் ஆப்கானிஸ்தானின் காபூலில் பாதுகாப்பான வீட்டில் இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து சர்வதேச அளவில் அல்-கொய்தாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே தலைவராக ஜவாஹிரி செயற்படுகின்றார்.

பகிரவும்...