வேலையின்றி தவிக்கும் சுற்றுலா பேருந்து பணியாளர்கள்
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களால் சுற்றுலாதுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களினால் வெளிநாட்டு பிரஜைகள் 44 பேர் உயிரிழந்த நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வாராமை காரணமாக 550 மேற்பட்ட சுற்றுலா பேருந்துகள் தரித்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நீல் ஜயதிஸ்ஸ எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் 1500 இற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் மொத்த வியாபாரத்திற்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மொத்த வியாபாரம் நூற்றுக்கு 70 சதவீதம் அளவில் சரிந்துள்ளதாக அத்தியவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.