Main Menu

வேகமாக வளரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில்

வேகமாக வளரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3% வளர்ச்சி பெறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 6.4% வளர்ச்சியடையும் என்றும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி காணும் எனவும் குறித்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அந்த அறிக்கையில் பல பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி குறித்த கண்ணோட்ட அறிக்கை ஒன்றை அனைத்துலக நாணய நிதியமும் (IMF) அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares