வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு!
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை எழுமாறாகத் தெரிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தீவிரமடைந்தபோது, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, ஒமிக்ரோன் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருபவா்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவா்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.