Main Menu

வறுமை ஒழிப்புக்கு முன்மாதிரியான சீன கிராமத்தை பார்வையிடவுள்ள ஜனாதிபதி

சீனாவின் சிசுவான் மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாளான இன்று (16), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கு பல அனுகூலங்களைப் பெற்றுத் தரும் பல விசேட கலந்துரையாடல்களில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் இறுதி நாளான நாளை (17) சீனாவில் உள்ள பல முன்னணி உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்கிறார்.
வறுமை ஒழிப்புக்கு முன்மாதிரியான சீன கிராமம் ஒன்றையும் அவர் பார்வையிடவுள்ளார்.
சிசுவான் மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருடன் ஜனாதிபதி நாளை விசேட கலந்துரையாடலில் இணைந்து கொள்கிறார்.
பகிரவும்...
0Shares