வடக்கு நைஜீரியாவில் காலரா நோய்த் தொற்றால் குறைந்தது 329பேர் உயிரிழப்பு
வடக்கு நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் காலரா நோய்த் தொற்றால், குறைந்தது 329 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மாநிலத்தின் 44 உள்ளாட்சி பகுதிகளில் 11,475 காலரா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக மாநிலத்தின் நோய் கண்காணிப்பு அதிகாரி சுலைமான் இலியாசு தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாநிலத்தின் மூன்று உள்ளாட்சி பகுதிகளில் 31பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், 11,115பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். 329பேர் உயிரிழந்துள்ளனர். காலரா நோய்களின் எண்ணிக்கையில் நாட்டின் இரண்டாவது இடத்தில் கனோ இருப்பதாக அவர் கூறினார்.
இந்த நோயை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநில அரசாங்கம் காலரா சிகிச்சை மையங்களை நிறுவியுள்ளதுடன் சமூக அணிதிரட்டல் மற்றும் சமூக விழிப்புணர்வை தீவிரப்படுத்தியுள்ளது.
காலரா என்பது மிகவும் தீவிரமான நோயாகும். இது கடுமையான நீரிழப்பால் மரணத்திற்கு வழிவகுக்கும் கடுமையான நீர் வயிற்றுப்போக்கின் திடீர் தாக்குதலால் வகைப்படுத்தப்படுகிறது.
நைஜீரியாவில் காலரா நோய் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆண்டுதோறும் பெரும்பாலும் மழைக்காலங்களில் மற்றும் அடிக்கடி மோசமான சுகாதாரம், அதிக கூட்டம், சுத்தமான உணவு மற்றும் தண்ணீர் இல்லாத பகுதிகளில், மற்றும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் ஒரு பொதுவான இடங்களில் இருந்து பரவுகின்றது.
ஆபிரிக்க நாடுகளில் அடிக்கடி நிகழும் வயிற்றுப் போக்கு நோயானது இந்தாண்டு மிகத்தீவிரமாக நைஜீரிய நாட்டை பாதித்திருக்கிறது.
தற்போது வரை 23 மாநிலங்களில் 67,903 பேருக்கு காலரா நோய் தாக்கியிருப்பதாகவும் அதில் 2,423 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நாட்டின் நோய் தடுப்புத் துறை அதிகாரி சிக்வே ஹெக்வேசு கூறுகையில், ‘வயிற்றுப் போக்கால் உயிரிழந்தவர்களில் 5 – 14 வயதுள்ள குழந்தைகளே அதிகம். இறப்பு வீதமானது ஆண்கள் 51 சதவீதமாகவும் பெண்கள் 49 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என கூறினார்.
ஒழுங்கற்ற சுகாதாரம், மக்கள் நெருக்கம், கனமழையால் உருவான குட்டை நீர்கள், குப்பைகள் நிறைந்த பகுதிகள் மூலம் காலரா கட்டுக்கடங்காமல் பரவியிருக்கிறது என அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.