Main Menu

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்த முயற்சி – விசாரணைகள் ஆரம்பம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசியல் குழுவொன்று  முயல்வது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்;கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் சமூக ஊடகங்களில் போலியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் சிலவருடங்களிற்கு முன்னர் முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர்தினநிகழ்வுகள் குறித்த வீடியோக்களை இந்த வருடம் பதிவிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

வடக்கில் 244 மாவீரர் தினநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன ஆனால் பத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் கொடிகள் இலச்சினைகள் காட்சிப்படுத்தப்பட்டன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூரலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு,ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் அதன் கொடிகளை இலச்சினையை காட்சிப்படுத்த முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares