Main Menu

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற மூன்று நாடுகள் உறுதி!

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன.

அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இருநாடுகளும் தொடர்ந்து முரண்பட்டுவருகின்றன.

இந்தநிலையில் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை குறித்து தங்கள் கவலைகளை தெரிவித்தனர்.

அணு ஆயுதம் இல்லாத நாடாக வடகொரியாவை மாற்ற தொடர்ந்து மூன்று நாடுகளும் உறுதியுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தினர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares