Main Menu

லஷ்கர் இ தொய்பா தலைவரின் மறைவிடத்தை வெளிப்படுத்திய இந்திய ஊடகம்

லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவரும் 26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத் (Hafiz Saeed), பாகிஸ்தான் அரசாங்கத்தின் கடுமையான பாதுகாப்பின் கீழ் லாகூரில் வசித்து வருவதாக “இந்தியா டுடே” கூறியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் உண்மையான ‍‍சூத்திரதாரியாக இருப்பவர் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதல்களில் தேடப்படும் சயீத், ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் படுகொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவராகவும் நம்பப்படுகிறது.

LeT இன் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) நடத்திய பயங்கரவாத தாக்குதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மிக உயர்ந்த அளவிலான இராஜதந்திர பதட்டங்களைத் தூண்டிய தாக்குதலுக்குக் காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் சயீத் வசிக்கும் இடம் ஒரு பயங்கரவாதத் தலைவருடன் தொடர்புபடுத்தக்கூடிய எதையும் போலல்லாது. அவர் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரத்தின் நடுவில் சாதாரண மக்களிடையே வசிக்கிறார்.

இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி எவ்வாறு வெளிப்படையான இடத்தில் ஒளிந்து கொள்கிறார் என்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வீடியோக்களை அணுகியுள்ளதாகவும் இந்தியா டுடே சுட்டிக்காட்டியுள்ளது.

ஹபீஸைப் பாதுகாக்க அவரது தனிப்பட்ட பாதுகாப்பும் அந்த இடத்தில் 24 மணிநேரமும் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே அணுகிய செயற்கைக்கோள் படம் மூன்று இடங்களை காட்டுகிறது:

அவரது குடியிருப்பு ஒரு மசூதி, மதரஸாவைக் கொண்ட ஒரு பெரிய கட்டிடம், மற்றும் ஹபீஸுக்கு தனிப்பட்ட வசதிகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட தனியார் பூங்கா ஆகியவை.

இந்த கண்டுபிடிப்புக்களானது அவர் சிறையில் உள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவிக்கும் கூற்றுக்கு முரணானகவும் அமைந்துள்ளது.

மேலும், ஹபீஸ் சயீத்தின் மறைவிடம் பற்றி இந்திய அமைப்புகளுக்குத் தெரியும் என்று இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...
0Shares