ராகுல் காந்தியை பிரதமராக்கும் மனநிலையில் தமிழக மக்கள்
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ராகுல் காந்தியை பிரதமராக்கும் மனநிலைக்கு தமிழக மக்களைக் கொண்டு வந்துள்ளது என்றார் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் மோடி மீது வெறுப்பு அலை வீசுகிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், ஒன்றில் கூட பாஜக கூட்டணி வெற்றி பெறாது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ராகுல் காந்தியை பிரதமராக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வந்துள்ளது என்றார்.