யாழில் குழுவொன்று நடத்திய தாக்குதலில் குடும்பஸ்த்தர் படுகாயம்
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, முதலியார் ஆலய பகுதியில் குழுவொன்று நடத்திய தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர், காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் முதலியார் ஆலய பகுதிக்கு வந்த குழுவொன்று, அப்பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர், நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.