Main Menu

மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்பு ?

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (30-ம் தேதி) மாலை 7 மணியளவில் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார்.
இவ்விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அழைப்பையேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை நாளை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்.