மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் – எச்சரிக்கிறது அமெரிக்கா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் மேலும் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. தீவிரவாதிகள் இன்னமும் செயற்பாட்டு நிலையில் இருப்பதாகவே அமெரிக்கா கருதுகிறது.
தீவிரவாதிகளைக் கைது செய்வதிலும், மறைவிடங்களைக் கண்டுபிடிப்பதிலும் சிறிலங்கா அதிகாரிகள் வெற்றிகரமாக செயற்படுகின்றனர்.
மக்களினதும் உடனடி பாதுகாப்பு தொடர்பில் இது மிகவும் சாதகமான முன்னேற்றம் ஆகும்.
விசாரணைகளுக்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எவ்பிஐ அதிகாரிகள் குழுவொன்று இங்கு களப் பணியாற்றுகிறது.
சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து அவர்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நன்றாக ஒத்துழைக்கிறார்கள். எமது உதவிகளை வரவேற்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.