Main Menu

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101-வது பிறந்த நாள் : மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தயாநிதிமாறன் எம்.பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பகிரவும்...