மீசாலையில் மின்னல் தாக்கியதில் இருவர் காயம்
யாழ்.மீசாலை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இருவர் இலக்காகிய நிலையில் காயமடைந்துள்ளனர்.
மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த அம்பலவானார் சிவசுப்பிரமணியம் (வயது 65) மற்றும் அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது 65) ஆகிய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு பகுதிகளில் எரி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
குறித்த இருவரும் நேற்றைய தினம் புதன்கிழமை மரம் ஒன்றின் கீழ் உரையாடி கொண்டு இருந்த வேளையே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகினர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை யாழில் கடந்த செவ்வாய்க்கிழமை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.