மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் – கைவிடப்படுகின்றது
மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை இந்திய இலங்கை கூட்டு முயற்சியிடம் ஒப்படைக்கும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை இலங்கை அரசாங்கம் கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டதடைகளை மீறி இந்திய ரஸ்ய கூட்டு முயற்சிக்கு அனுமதிவழங்க இலங்கை அதிகாரிகள் தயாராகயி;ல்லை என்பதால் இந்ததிட்டம் கைவிடப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னைய அரசாங்கம் மத்தல விமானநிலையத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவின் சௌர்யா ஏரோநோட்டிக்ஸ் மற்றும் ரஸ்யாவின் எயர்போhர்ட் ஒவ் ரீஜன்சிடம் கையளி;க்க தீர்மானித்தது.
இதற்கு அனுமதிவழங்குவதற்காக உடன்படிக்கையின் நகல்வடிவத்தினை சட்டமா அதிபர் திணைக்களத்தி;ற்கு அனுப்பியிருந்தனர்.
எனினும் இலங்கையி;ல் விமானநிலைய போக்குவரத்து அதிகாரசபைக்கு மாத்திரமே விமானநிலையங்களை முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை அரசாங்கம் மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க தயாரில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் குறிப்பிட்ட நிறுவனம் இந்த திட்டத்தினை முன்னெடுக்க விரும்பவில்லைஇது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் நீண்டகாலமாக தொடர்புகொள்ளவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பகிரவும்...