Main Menu

மட்டு. வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை  (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள், மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு வருகின்றன.

தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திருட்டுச் சம்பவத்தால் மீனவர்களும், படகு உரிமையாளர்களும் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான நாசகார கும்பலிடமிருந்து மீனவர் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரி அதற்கான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீனவர் சமூகம் மகஜர்களை கையளித்தனர்.

பகிரவும்...
0Shares