Main Menu

போர் நிறுத்தம் அமுல் – லெபனானுக்கு திரும்பும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்

இஸ்ரேலுக்கும் லெபானின் ஹெஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் லெபனானுக்கு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், தென் லெபானை நோக்கி மக்கள் மீளத் திரும்புவதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன், சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதேவேளை, லெபனானில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காசாவில் தாக்குதல்கள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...
0Shares