Main Menu

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை சுற்றிவளைத்து தாக்கியதாகக் கூறப்படும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹென்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் நாரஹென்பிட்டி , மகாவத்த பிரதேசத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தபோது தாபரே மாவத்தையிலிருந்து எல்பிட்டிகல நோக்கிப் பயணித்த கார் ஒன்று அதிக வேகத்துடன் பயணிப்பதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், இந்தக் காரானது எல்பிட்டிகல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ள நிலையில் அதில் பயணித்தவர்கள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, அங்குச் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காரை வீதியிலிருந்து எடுக்குமாறு அவர்களிடம் கூறியதையடுத்து சந்தேக நபர்கள் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹென்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பகிரவும்...
0Shares