பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: மாணவர்கள் 2ஆவது நாளாகவும் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து 2ஆவது நாளாகவும் மாணவர்கள் போராட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அரசியல் கட்சிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுகோட்டை அரசு கல்லூரி கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து 2ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென மாணவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைபேட்டையிலுள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !