பொன்னியின் செல்வன் கதையில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா
மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் நயன்தாரா ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
இந்த கதையை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அமிதாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் மோகன்பாபு மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சூழ்ச்சி செய்யும் மாய மோகினி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.
பூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தளபதி 63, தர்பார் படங்களில் நயன்தாரா பிசியாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.