பிரித்தானியா விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது
பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச விமானத்தின் மூலம் தரையிறங்கிய நால்வரும் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டள்ளதாகவும், கைதானவர்கள் பெட்போர்டசியார் (Bedfordshire) காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட்யார்ட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 10 ஆம் திகதி இரவு 9.30ற்கும் 11.45ற்கும் இடைப்பட்ட வேளையில் கைதான இவர்கள் அடுத்தநாள் காலை வியாழக்கிழமை 11 ஆம் திகதி “பயங்கரவாத தடைச்சட்டம் 11 – 2000 ஏழாவது பிரிவின் கீழ் ” தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.