பிரிட்டிஷ் காலனித்துவ நாடாக இருந்த பார்படோஸ் குடியரசாக மாறியது
பல நூறு ஆண்டுகளாக, பிரிட்டிஷ் காலனிதத்துவ நாடக இருந்த பார்படோஸ், பிரித்தானிய ராணி எலிசபெத்தை அரச தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
இதனை அடுத்து அந்நாட்டின் முதல் ஜனாதிபதி நியமிக்கப்பட்டு ஒரு புதிய குடியரசை பார்படோஸ் உருவாக்கியுள்ளது.
தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள சேம்பர்லைன் பாலத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் புதிய குடியரசு பிறந்தது.
இதன்போது ஹீரோஸ் சதுக்கத்தில் பார்படாஸின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, துப்பாக்கி வேட்டும் தீர்க்கப்பட்டது.
கரீபியன் தீவுக்கு முதல் ஆங்கிலக் கப்பல்கள் வந்து ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியாக எஞ்சியிருந்த காலனித்துவப் பிணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோயல் ஸ்டாண்டர்ட் கொடி, தலைநகர் பிரிட்ஜ்டவுனில் இறக்கப்பட்டதை அடுத்து தீவின் முதல் ஜனாதிபதியாக முன்னாள் ஆளுநர் சாண்ட்ரா மேசன் பதவியேற்றார்.
இதேவேளை ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள 54 நாடுகளின் குழுவான கொமன்வெல்த்தில் பார்படோஸ் நாடும் ஒரு குடியரசாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.