பிரான்ஸில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.5 வீதத்தால் அதிகரிப்பு!
பிரான்ஸில் கடந்த 2015ஆம் ஆண்டு சிகரெட் புகைத்த 75,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
Santé publique France இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய், இருதய மற்றும் சுவாச நோய்களை தோற்றுவிக்கும் சிகரெடினால் கடந்த 2015 ஆம் ஆண்டில் மொத்தமாக 75, 320 பேர் உயிரிழந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 11 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
எனினும், அதேகாலப்பகுதியில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.