பிரான்சைச் சேர்ந்த 2 ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி பல பொதுமக்களை கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றதுடன் பலரைக் கைது செய்து அயல் நாடான ஈராக்கிடம் ஒப்படைத்திருந்தது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களில் பிரான்சைச் சேர்ந்த 12 பேருக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில் 4 பேருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 2 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு நேற்று மரண தண்டனை விதித்து பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.