பாடசாலைக்கு கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற சிறுவன் கைது!
மேற்கு ஒட்டாவாவிலுள்ள பாடசாலையொன்றில், கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற 13 வயது சிறுவனை ஓட்டாவா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நீபேன் பகுதியிலுள்ள இடைநிலைப் பாடசாலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இச்சிறுவனை கைதுசெய்துள்ள பொலிஸார், குறித்த சிறுவன் யாரையும் அச்சுறுத்தவில்லையென தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதுகாப்பு கவலை இருப்பதால் குறித்த சிறுவனை, பாடசாலையிலிருந்து விலக்கியுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும். குறித்த சிறுவனின் பெயர் உள்ளிட்ட விடயங்களை கூற மறுத்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.