பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம்
பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை எனப் போற்றப்படும் அப்துல் காதிர் கான் இன்று மரணம் அடைந்தார்.
இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதற்கு போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்கியது. இதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான்.
அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கினார். இதன் காரணமாக அவர் பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைக்கப்பட்டார்.
85 வயதான அவருக்கு சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.