பஸ் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை
உயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டு இருப்பதாக இலங்கைப் போக்குவரத்து சபையின் தலைமை நடவடிக்கை அதிகாரி நிஹால் ஹிதல்ல ஆராச்சி தெரிவித்துள்ளார். பஸ் பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து அமைச்சில் எமக்கு விஷேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு அருகாமையில் உள்ள பொதிகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்துமாறும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.உரிமையாளர் அற்ற நிலையில் காணப்படும் பொதிகளை வைத்திருக்க வேண்டாம் எனவும் அது தொடர்பாக நடத்துனருக்கு அறிவிக்க வேண்டும். இதே போன்று சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது நபர்கள் காணப்படுவராயின் அவர்கள் தொடர்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களையும் நாம் வழங்கியுள்ளோம்.
பஸ்களில் தற்பொழுது பொதிகள் ஏற்றிச் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் சிறிய பொதிகளை தம்முடன் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். இந்த பொதிகள் பஸ் நடத்துனர்களின் மேற்பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர் எடுத்து செல்ல முடியும்.