Main Menu

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் இன்று (22) முதல் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 995 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 300 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் ஒரு கிலோ கிராம் சிவப்பு கௌப்பி 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு 765 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேபோல், ஒரு கிலோ கிராம் நெத்தலி 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 940 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய் 830 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உப்பு 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் பருப்பு 288 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஒரு கிலோ கிராம் பாஸ்மதி அரிசியின் விலை 645 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பகிரவும்...
0Shares