பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் சந்திப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்றய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்விசாரா பணியாளர்களினதும் விரிவுரையாளர்களினதும் வேதனத்தில் பாரிய வேறுபாடு காணப்படுவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளனம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
விரிவுரையாளர்களின் வேதனம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூர்ய இதன்போது தெரிவித்துள்ளார்.
பகிரவும்...