நைஜீரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் பிரஜைகள் கைது….!
அவிசாவளை – உக்வத்தை பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
36 மற்றும் 31 வயதுகளையுடைய நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிரேண்பாஸ் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.