நுங்கம்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச்சிலையை திறந்து வைத்து, சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பகிரவும்...