நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது – சோபித தேரர்
நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன என ஒமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாடு குறித்து பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுவரும் நிலையில் சோபித தேரரும் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை ஒரு பாரதூரமான குற்றம் என குறிப்பிட்ட அவர் தேசிய வளங்களை தன்னிச்சையாக விற்பனை செய்வதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தாங்கள் ஆட்சியில் நீடிக்கப்போவதில்லை என்ற எண்ணத்தில் நாட்டை ஆட்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவில் நடந்ததைப் போன்ற நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் என்றும் சோபித தேரர் எச்சரித்துள்ளார்.