நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார்.
சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமான ரித்திஷ் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2009 மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த 2014-ல் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.
இன்று இராமநாதபுரத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய ரித்திஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.