தோற்றாலும் தல தோனியைக் கொண்டாடும் ரசிகர்கள்..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன்னில் தோல்வி அடைந்தாலும், கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட்ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐ.பி.எல் டி-20 தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில், முன்னணி வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற கேப்டன் தல தோனி தனியாளாக போராடினார். எதிரணி பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்த அவர் 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார்.
இருப்பினும், ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும், கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தோனியின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.