தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்: வெள்ள நீரில் மூழ்கும் கார்கள்
தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அல்மேந்திரலேஜோ மற்றும் லெபே பகுதிகளில் கடும் வெள்ளத்தால், வீடுகள் மற்றும் கார்கள் வெள்ள நீரில் மூழ்கின.
அண்டலூசியன் வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஹூல்வா மாகாணத்தின் சில பகுதிகளில் 12 மணிநேர காலப்பகுதியில் 100 மிமீ மழை பெய்துள்ளது.
இதனிடையே’எமர்ஜென்சியஸ் 112 ஆண்டலூசியா’ என்ற உதவி வாடிக்கையாளர் சேவைக்கு 600க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது.
தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதால், அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.