Main Menu

தமிழ்ப் பொது வேட்பாளர் பின்னணியில் இன வாதத்தைத் தூண்டுபவர்களே உள்ளனர் – மூத்த போராளி ராகவன்

தமிழ்ப் பொது வேட்பாளரின் பின்னணியில் உள்ளவர்கள் தற்போது இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவே இருப்பதாக மூத்த போராளி ராகவன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்ப் பொது வேட்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறுகிய நோக்கில் இனவாதத்தைப் பேசித் தமது எதிர்கால அரசியலுக்குத் திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றும் மூத்த போராளி ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.