தமிழக நலனுக்காக திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படும்- ராகுல் காந்தி
டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.
இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வளமான, வலிமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...