Main Menu

ஜோர்ஜியாவில் பொதுத் தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் – விசாரணைக்கு அழைப்பு

ஜோர்ஜியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், தேர்தல் சட்டம் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்துள்ளன.
கடந்த சனிக்கிழமை ஜோர்ஜியாவில் இடம்பெற்ற தேர்தலில் வாக்கெடுப்பு சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஷ்யாவுடனான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆளும் கட்சிக்கும் ஐரோப்பாவுடனான கொள்கைகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
குறித்த தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமைக்கு எதிராக பொதுமக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி சலோமி சௌராபிச்விலி வலியுறுத்தினார்.
பகிரவும்...
0Shares