ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கடுமையான பிணை நிபந்தனைகளுடன் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணை வழங்குகின்றவர்களில் 2 பேர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும்.
அத்துடன் விசாரணை நடவடிக்கைகளுக்கு எந்த அழுத்தங்களும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொடுக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.