ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
48 மணி நேரத்திற்குள் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும்.
ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும், தொடர்ச்சியான தேடல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஷோபியன் மாவட்டத்தின் கெல்லர் பகுதியில் நடந்த ஒரு அதிரடி நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (13) கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், இரண்டு பயங்கரவாதிகள் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பகிரவும்...